மண்சரிவில் பலி 7 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி அமைச்சர் வழங்கினார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில் மண் சரிவில் சிக்கி வீட்டுக்குள் இருந்த கூலித்தொழிலாளி ராஜ்குமார்(32), அவரது மனைவி மீனா(26), அவர்களது குழந்தைகள் கவுதம்(9), மகள் இனியா(7) மற்றும் உறவினர்களின் குழந்தைகளான மகா (12), ரம்யா(12), வினோதினி(14) ஆகியோர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர்.

இவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 7 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவித்தொகைக்கான ஆணையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

The post மண்சரிவில் பலி 7 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: