சவுதி அரேபியாவில் போதை பொருள் கடத்தல் வழக்கு: இந்தியருக்கு மரண தண்டனை


மீரட்: இந்தியாவை சேர்ந்த இளைஞரான ஜெய்த் ஜூனைத்(35) சவுதி அரேபியாவின் மெக்காவில் போலீஸ் அதிகாரியின் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜூனைத் ஓட்டி வந்த காரில் 700 கிராம் போதை பொருள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் போதை பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சிக்கிய ஜூனைத்துக்கு மரண தண்டனை விதித்துள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜூனைத் உபி மாநிலம் மீரட்டை சேர்ந்தவர்.

மீரட் எஸ்பி கூறுகையில்,‘‘மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து சவுதி அரசு கடிதம் எழுதியுள்ளது. இது குறித்த நோட்டீஸ் ஜூனைத்தின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது’’ என்றார். ஜூனைத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை கேள்விப்பட்டதும் அவருடைய மனைவி,தாய், தந்தை ஆகியோர் கடும் துயரத்தில் உள்ளனர். அவருடைய சகோதரர் சுகைல் கூறுகையில்,‘மரண தண்டனையில் இருந்து ஜூனைத்தை காப்பாற்றுவதற்கு கருணை மனு சவுதி அரசாங்கத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post சவுதி அரேபியாவில் போதை பொருள் கடத்தல் வழக்கு: இந்தியருக்கு மரண தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: