இதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இதுவரை 430க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை நியூ ஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. பெரும்பாலான உலக நாடுகளின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்கு இஸ்ரோ பங்களித்து வரும் நிலையில், அண்மையில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.
அதன்படி, புரோபா-3 என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 4.08 மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், இறுதிக்கட்டப் பணியான கவுன்டவுன் நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான 25 மணி நேரம் கவுன்டவுன் நேற்று மாலை 3.08 மணிக்கு தொடங்கியது.
The post புரோபா-3 செயற்கைக்கோளுடன் விண்ணில் இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் appeared first on Dinakaran.