சென்னை: சமூக ரீதியாக, கல்வி ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களை கைதூக்கி விடுவதே சமூக நீதி என்று சமூக நீதி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். ஒன்றிய அரசில் காலியாக உள்ள ஓ.பி.சி., எஸ்.சி. பணியிடங்களை நிரப்பவேண்டும். நாடு முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவே இந்த மாநாடு. சமூக நீதி கருத்தியல் வெற்றிபெற ஒத்த கருத்துடைய சக்திகள் ஒன்றிணைந்துள்ளோம் என்று டெல்லியில் நடைபெற்றுவரும் அகில இந்திய சமூக நீதி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றியுள்ளார்.
The post சமூக நீதி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.