×

ஊட்டி நகராட்சி புதிய கமிஷனர் பொறுப்பேற்பு

 

ஊட்டி, டிச.3: ஊட்டி நகராட்சி புதிய கமிஷனராக ஸ்டேன்லி பாபு பொறுப்பேற்றுக் கொண்டார். ஊட்டி நகராட்சியின் கமிஷ்னராக ஜஹாங்கீர் பாஷா கடந்த 5 மாதங்களாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த மாதம், கணக்கில் வராத ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் வைத்திருந்ததாக, அவர் மீது ஊட்டி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரிடம் இருந்து அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து, அவர் ஊட்டி கமிஷனர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக, நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டார். தொடர்ந்து, கடந்த ஒரு மாதமாக ஊட்டி நகராட்சி பொறியாளர் சேகரன், கூடுதலாக கமிஷ்னர் பதவியை கவனித்து வந்தார். இந்நிலையில், கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷ்னராக இருந்த ஸ்டேன்லி பாபு ஊட்டி நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், நேற்று ஊட்டி நகராட்சியின் புதிய கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்டார்.

The post ஊட்டி நகராட்சி புதிய கமிஷனர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Ooty Municipality ,Ooty ,Stanley Babu ,Jahangir Pasha ,
× RELATED நகராட்சி மார்க்கெட் கட்டுமான பணிகள் வேகப்படுத்தப்படும்