×

பாரதிநகர் பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை

 

மஞ்சூர், டிச.2: மஞ்சூர் அருகே பாரதிநகரில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள தொட்டகொம்பை பாரதிநகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் தேயிலை தோட்ட கூலித்தொழிலாளர்கள் உள்ள இப்பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. குடிநீருக்காக காலி குடங்களுடன் தொலைதுாரம் செல்ல வேண்டியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியுற்று வந்தனர்.

இதைத்தொடர்ந்து பாரதிநகரில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.  இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் சத்தியவாணி, துணை தலைவர் நேரு, செயல் அலுவலர் மனோகரன் ஆகியோர் பாரதிநகர் பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து குடிநீர் பிரச்னை குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

The post பாரதிநகர் பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Bharatinagar ,Manjoor ,Kilikunda ,Thottakombai Bharatinagar ,Nilgiris district ,
× RELATED விபத்துகளை தடுக்கும் வகையில் மஞ்சூர்...