அதில் வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி 4.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கான வெற்றிச்சான்றிதழை வயநாடு காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று முன்தினம் டெல்லி சென்று பிரியங்கா வசம் ஒப்படைத்தனர். இதையடுத்து நேற்று நாடாளுமன்றம் வந்த பிரியங்கா, வயநாடு எம்பியாக பதவி ஏற்றார். அவர் நாடாளுமன்றம் நுழைந்த போது காங்கிரஸ் எம்பிக்கள் ஆரவாரமாக வரவேற்றனர். நாடாளுமன்ற வாயிலில் அவரை நிறுத்தி, ராகுல்காந்தி புகைப்படம் எடுத்தார். அவருடன் இணைந்து காங்கிரஸ் எம்பிக்களும் நின்று குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
* 1972 ஜனவரி 12ல் பிறந்த பிரியங்கா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 2019ல் தீவிர அரசியலில் களம் இறங்கினார். தற்போது தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
* பிரியங்கா பதவி ஏற்றதை மக்களவை மாடத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா கணவர் ராபர்ட் வத்ரா, மகன் ரைஹான் மற்றும் மகள் மிராயா ஆகியோர் பார்வையிட்டனர்.
* ஒரே குடும்பத்தில் 3 பேர் எம்பி
பிரியங்கா எம்பியானதால் தாய் சோனியா, சகோதரர் ராகுலுடன் இணைந்து ஒரே குடும்பத்தில் 3 பேர் எம்பியாக நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளனர். இது ஒரு அரிதான நிகழ்வு ஆகும். இதில் ராகுலும், பிரியங்காவும் மக்களவை எம்பியாகவும், சோனியா மாநிலங்களவை எம்பியாகவும் உள்ளனர்.
The post அரசியலமைப்பு சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி மக்களவையில் எம்பியாக பதவியேற்றார் பிரியங்கா appeared first on Dinakaran.