மதுரையில் மேம்பால பணி: இரும்பு சாரம் சரிந்து 6 தொழிலாளிகள் காயம்


மதுரை: மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கோரிப்பாளையம் பகுதியில் தல்லாகுளம் சந்திப்பில் இருந்து செல்லூர் வரை ரூ.190 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில், செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் சாலையில் 9, 10வது தூண்களுக்கு இடையில் இணைப்பு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாரத்தில் நின்று சென்ட்ரிங் தொழிலாளர்களான திருச்சியைச் சேர்ந்த பழனிச்சாமி, சிவகங்கை மாவட்டம் வெள்ளிக்குறிச்சி அய்யங்காளை, மதுரை பூவலிங்கம், இளையான்குடி பிரபு உள்ளிட்ட 10 பேர் வரை பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை தூண்களை இணைக்கும் பீம் அமைக்க பாலத்தின் மேல் கம்பி கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கான்கிரீட்டிற்கான சாரம் சரிந்ததால் பழனிச்சாமி உள்ளிட்ட 6 பேர் காயம் அடைந்தனர்.

The post மதுரையில் மேம்பால பணி: இரும்பு சாரம் சரிந்து 6 தொழிலாளிகள் காயம் appeared first on Dinakaran.

Related Stories: