ஊட்டி: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு வரும் டிசம்பர் 28 துவங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 2 வரை 6 நாட்கள் குன்னூர் – ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. குன்னூரில் காலை 8.20க்கு புறப்பட்டு 9.40க்கு ஊட்டி வந்தடையும். இதேபோல் ஊட்டியில் இருந்து மாலை 4.45க்கு புறப்பட்டு 5.55க்கு குன்னூர் சென்றடையும். ஊட்டி – கேத்தி – ஊட்டி இடையே 3 ரவுண்ட் ஜாய் ரைட் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. முதல் சுற்று ஊட்டியில் காலை 9.45க்கு புறப்பட்டு 10.10க்கு கேத்தி சென்றடையும். அங்கிருந்து 10.30க்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டி வந்தடையும்.
இரண்டாவது சுற்று 11.30க்கு ஊட்டியில் புறப்பட்டு 12.10க்கு கேத்தி சென்றடையும். அங்கிருந்து 12.40க்கு புறப்பட்டு மதியம் 1.10க்கு ஊட்டி வந்தடையும். மூன்றாம் சுற்று மாலை 3 மணிக்கு ஊட்டியில் புறப்பட்டு 3.30க்கு கேத்தி சென்றடையும். 4 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30க்கு ஊட்டி வந்தடையும். இதேபோல், மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே டிசம்பர் 25,27,29 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் காலை 9.10க்கு புறப்பட்டு மதியம் 2.25க்கு ஊட்டி வந்தடையும். மறு மார்க்கத்தில் 26, 28, 30 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் காலை 11.30க்கு ஊட்டியில் புறப்பட்டு மாலை 4.20க்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
The post ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே டிச.25 முதல் ஜன.2 வரை சிறப்பு மலை ரயில் appeared first on Dinakaran.