உப்பிலியபுரம் பகுதி மாணவ, மாணவிகள் நலன் கருதி நகர பேருந்துகளில் தானியங்கி கதவு: பெற்றோர், பயணிகள் மட்டற்ற மகிழ்ச்சி

துறையூர்: திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அரசு போக்குவரத்து பணிமனை நகரப் பேருந்தில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிட், திருச்சி மண்டலம் சார்பில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கப்பட்டு நகர பேருந்துகளும் புறதகரப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. நகரப் பேருந்துகளில் பெரும்பாலும் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மாணவியர்கள் அதிகளவில் பயணம் செய்து வருகிறார்கள்.

மேலும் பெண் பயணிகளுக்கு கட்டணமில்லா பேருந்து சேவைகளையும் அரசு நகரப் பேருந்துகளில் தமிழ்நாடு அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற மாணவர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும் அரசு நகரப் பேருந்துகளில் முன்பக்க படிக்கட்டுகள் பாதை மற்றும் பின்பக்க படிக்கட்டுகளில் தொங்கி செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் தானியங்கி கதவுகள் பொருத்தி இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்களும் பெற்றோர்களும் வைத்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உப்பிலியபுரம் பணிமனையில் முதன் முதலாக பேருந்து வழித்தடம் 12பி-ல் கதவு பொருத்திய பேருந்து அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

இந்த நகரப் பேருந்தானது சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து த.மங்கப்பட்டி, த.முருங்கப்பட்டி, கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வெங்கடாசலபுரம், சிக்கத்தம்பூர் பாளையம், சிக்கத்தம்பூர் வழியாக துறையூர் பேருந்து நிலையத்தை வந்தடைகிறது. இந்தப் பேருந்தில் துறையூரைச் சுற்றியுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ மாணவிகள் பயணம் மேற்கொள்கிறார்கள். இப்பேருந்தில் தானியங்கி கதவுகள் படிக்கட்டுகள் பாதையில் பொருத்தப்பட்டு பயணம் செய்யும் பயணிகள் அனைவரின் பாதுகாப்பினை உறுதி செய்யப்பட்டதால் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தது மட்டுமில்லாமல் இந்த வசதியை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு அரசிற்கும், சம்பந்தப்பட்ட கும்பகோணம் லிட் போக்குவரத்து கழகம், திருச்சி மண்டல அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

The post உப்பிலியபுரம் பகுதி மாணவ, மாணவிகள் நலன் கருதி நகர பேருந்துகளில் தானியங்கி கதவு: பெற்றோர், பயணிகள் மட்டற்ற மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: