சென்னை: சென்னையில் முருங்கைக்காய் விலை கிலோவுக்கு ஒரே நாளில் ரூ.100 அதிகரித்து ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வரை மொத்த விலையில் ரூ.250-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.350-க்கு விற்பனை விற்கப்படுகிறது. மழையால் வரத்து குறைந்ததால் முருங்கைக்காய் விலை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சில்லறை விற்பனை கடைகளில் முருங்கைக்காய் கிலோ ரூ.380 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு முருங்கைக்காய் விலை ரூ.40ஆக அதிகரித்துள்ளது.
The post முருங்கைக்காய் விலை கிலோ ரூ.350க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.