கிருஷ்ணகிரி, நவ.27: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 75வது இந்திய அரசியலமைப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 75வது அசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, இந்திய அரசமைப்பு முகவுரையை கலெக்டர் சரயு வாசிக்க, அனைத்துத் துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) புஷ்பா, (கணக்குகள்) கதிரவன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.