ரூ.12 லட்சம் வீட்டு மனை மோசடி: கலெக்டரிடம் மூதாட்டி மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரைச் சேர்ந்தவர் பானுமதி (65). இவர் கடம்பத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். ஓய்வு பெற்றபின் தனக்கு வந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து வைத்துள்ளார். அப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள் கடம்பத்தூரில் வீட்டுமனை விற்பனைக்கு இருப்பதாக கூறினர். ஆனால், வீட்டு மனையை வாங்க அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், ரகுராஜ், பன்னீர்செல்வம் ஆகியோரிடம் ரூ.12 லட்சத்து 94 ஆயிரம் பணத்தை வாங்கிக்கொண்டு வேறொரு வீட்டுமனையை பத்திரப்பதிவு செய்து பானுமதிக்கு கொடுத்தனர். தான் கேட்ட வீட்டுமனைக்கு பதிலாக வேறு வீட்டுமனை தேவை இல்லை என மூதாட்டி பானுமதி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, 3 மாதத்தில் பணத்தை திருப்பித் தருவதாக கூறிவிட்டு தராமல் அலைக்கழித்துள்ளனர். இதுகுறித்து பானுமதி கடம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்றுமுன்தினம் கலெக்டர் பிரபுசங்கரிடம் மூதாட்டி பானுமதி புகார் கொடுத்தார். 105 வயது தாயுடன் குடும்ப செலவுக்கு சிரமப்படுகிறேன். எனவே மோசடி செய்த நபர்களிடமிருந்து பணத்தை மீட்டு தருமாறு கண்ணீர் மல்க கூறியிருந்தார். இதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில் பானுமதி அங்கிருந்துசென்றார்.

The post ரூ.12 லட்சம் வீட்டு மனை மோசடி: கலெக்டரிடம் மூதாட்டி மனு appeared first on Dinakaran.

Related Stories: