இதனால், சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை பயிர் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பச்சைபயிறு, உளுந்து விதைகளை பொறுத்தவரை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. நுண்ணுயிர் ஊட்டச்சத்து, உயிர் உரங்கள் அனைத்தும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. நிலக்கடலை சாகுபடியில் அதிக இடுபொருள் செலவாக இருப்பது விதையே. எனவே, நல்ல தரமான விதையை தேர்வு செய்து விதைப்பு செய்யும் போது உயர் விளைச்சல் பெறலாம். நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை நிலக்கடலையை கட்டாயம் பரிசோதனை செய்த பின்னர் நடவு பணியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
The post பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் appeared first on Dinakaran.