பாடாலூர், நவ. 26: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்த நாள் (நவ.27) தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். அனைத்து கிளைகளிலும் கட்சி கொடியேற்றி இனிப்பு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் போன்ற உதவிகளை மக்களுக்கு வழங்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சிகளில் திராவிட மாடல் அரசின் புரட்சிகர திட்டங்களான கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை மாதம்தோறும் ரூ.1000, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000, மாணவர்களுக்கு ரூ.1000, மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை பொதுமக்களுக்கு கட்சி நிர்வாகிகள் விளக்க வேண்டும். பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் அனைத்து கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணியினர், திமுக முன்னோடிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
The post ஆலத்தூர் ஒன்றியத்தில் தமிழக துணை முதல்வர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் appeared first on Dinakaran.