1 டீஸ்பூன் வெண்ணெய் ,
10 கிராம்பு,
பூண்டு வெட்டப்பட்டது,
5 பச்சை மிளகாய் (நீளமாக நறுக்கியது),
2 கப் பால்,
¼ கப் முந்திரி தூள்,
உப்பு தேவையான அளவு,
½ தேக்கரண்டி சர்க்கரை,
1 தேக்கரண்டி வெள்ளை மிளகு தூள்,
500 கிராம் கோழி (எலும்பு இல்லாதது),
2 டீஸ்பூன் மைதா மாவு,
4 டீஸ்பூன் சோள மாவு,
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, சோள மாவு, மிளகுத் தூள் , உப்பு , தண்ணீர் சேர்த்து திக்கான பேஸ்ட்டாக கரைத்துக்கொள்ளவும். அதில் கழுவிய கோழித் துண்டுகளை நன்கு பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இன்னொரு கடாயில் வெண்ணெய் சேர்த்து பச்சை மிளகார், மற்றும் நறுக்கிய பூண்டுகளை சேர்த்து வதக்கவும். உடன் பால் மற்றும் முந்திரி தூள் சேர்த்து பொரித்த கோழியையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சூடான ஜப்பான் சிக்கன் தயார்.
The post ஜப்பான் சிக்கன் appeared first on Dinakaran.