காந்த்வி

தேவையானவை:

½ கப் கடலை மாவு,
½ கப் தயிர்,
2 பச்சை மிளகாய்,
½ இன்ச் இஞ்சி,
1/4 டீஸ்பூன் பெருங்காயம்,
¼ டீஸ்பூன் மஞ்சள், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:

பச்சை மிளகாய், இஞ்சி இரண்டையும் நன்கு அரைத்துக் கொள்ளவும். கடலை மாவு, தயிர், மிளகாய், இஞ்சி பேஸ்ட், பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக்கொண்டு. அதனை வடிகட்டிக் கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு கடாயில் ஊற்றி மிதமாக சூடேற்ற கிரீம் பதத்திற்குக் கிடைக்கும். இந்தப் பதத்தில் இருக்கும் போதே ஒரு தட்டில் கடலை மாவு கலவையை நன்கு பரப்பிக் கொள்ளவும். சூடு ஆறுவதற்குள் மேலே தேங்காய்த் துருவல், கொத்தமல்லி தூவி விட்டுவிடவும். சூடு ஆறும் தருவாயில் ஓரங்களில் ஒட்டாமல் தனியாக வரும். இவ்வேளையில் அப்படியே வெட்டி, சுருளாக உருட்டவும். இந்த உருளைகளை ஒரு தட்டில் அடுக்கி வைத்துகொள்ளவும். ஒரு கடாயில் எண்ணேயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மேலே கொட்டி விடவும். சுவையான காந்த்வி காரம் தயார்.

 

The post காந்த்வி appeared first on Dinakaran.