இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ததகஞ்சில் இருந்து ஃபரித்பூருக்கு சென்று கொண்டிருந்த கார், பாலம் கட்டுமானப் பணிகள் நடப்பதை அறிந்திருக்கவில்லை. அதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், பாதி முடிக்கப்பட்ட பாலத்தின் சாலையில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கிட்டத்தட்ட பாலத்தில் இருந்து 25 அடி கீழே விழுந்து 3 பேர் பலியாகினர். உயிரிழந்த மூவரும் மைன்புரியில் வசிக்கும் கௌஷல் குமார், விவேக் குமார் மற்றும் அமித் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் கூகுள் மேப்பை பார்த்து, இந்த பாலத்தில் பயணம் செய்துள்ளனர். கூகுள் மேப் அழைத்து வந்ததில், பாதியில் பாதையில் செல்ல வழியில்லாததால் கட்டுப்பாட்டை இழந்து கார் விழுந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த பாலம் விழுந்தது. அதன்பின் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. பாலத்தில் எச்சரிக்கை அறிகுறிகளோ? பிற அடையாளங்களோ வைக்கப்படாததால் விபத்து நடந்துள்ளது’ என்றனர்.
The post உத்தரபிரதேசத்தில் சோகம்: கட்டிமுடிக்காத பாலத்தில் இருந்து விழுந்து கூகுள் மேப்பை நம்பி காரில் சென்ற 3 பேர் பலி appeared first on Dinakaran.