பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. பெர்த் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்கள், 2-வது இன்னிங்சில் 487/6 ரன்கள் எடுத்து டிக்ளேர் ஆனது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 104 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. 534 ரன் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 238 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சில் இந்தியா தரப்பில் பும்ரா, சிராஜ் தலா 3, வாஷிங்டன் சுந்தர் 2, ராணா, நிதிஷ் தலா 1 விக்கெட் எடுத்தனர். பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டியில் வென்றதால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா பதிவு செய்த மிகப்பெரிய (295 Runs) டெஸ்ட் வெற்றி இதுவாகும். 2008ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் இந்தியா வெற்றியை ஆழப்பதித்தது.
ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய முதல் கேப்டன் என்ற பெருமையை ஜஸ்ப்ரித் பும்ரா பெற்றார்.
The post ஆஸ்திரேலியாவில் சம்பவம் செய்த இந்திய அணி: 16 ஆண்டுகளுக்குப் பின் கொடி நாட்டியது appeared first on Dinakaran.