சவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்வாக இயக்குநர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் வெளியிட்ட அறிவிப்பு: சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங்கில் தேர்ச்சி பெற்று 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கான நேர்காணல் அடுத்த மாதம் 9ம் தேதி 12ம் தேதி வரை கொச்சியில் நடைபெற உள்ளது.

இதுகுறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in-ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் ஊதியம் மற்றும் பணி பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களில் (9566239685, 6379179200, 044-22505886, 044-22502267) அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: