சிங்கம்புணரியில் மாடுகளுக்கு பரவும் அம்மை நோய்: சிகிச்சை அளிக்க கோரிக்கை

 

சிங்கம்புணரி, நவ. 22: சிங்கம்புணரியில் கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. இதில் சில மாடுகளுக்கு தற்போது அம்மை நோய் பரவி வருகிறது. குறிப்பாக, சிவகங்கை தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சேவுகப் பெருமாள் கோயிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட மாடுகளில் சிலவற்றுக்கு அம்மை நோய் பரவியுள்ளது. இதனால் மாடுகள் உயிரிழக்கும் நிலை உள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

சிங்கம்புணரியில் கால்நடைகள் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் கால்நடைகளுக்கு நோய் பரவல் இயல்பானதே. இருப்பினும் தற்போது கால்நடைகளுக்கு தற்போது கொடிய நோயான அம்மை பரவி வருகிறது. எனவே, மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க கோயில் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சிங்கம்புணரியில் மாடுகளுக்கு பரவும் அம்மை நோய்: சிகிச்சை அளிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: