தஞ்சை ஆசிரியை படுகொலையை கண்டித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 

புதுக்கோட்டை,நவ.22: தஞ்சை ஆசிரியை படுகொலையை கண்டித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஆசிரியர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது- இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் புதுக்கோட்டை மாவட்ட கிளையின் சார்பில் புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தவமணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ஜோதிமணி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சண்முகநாதன் சிறப்புரையாற்றினார். கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் முருகேசன் நன்றி கூறினார். அதேபோல் இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

The post தஞ்சை ஆசிரியை படுகொலையை கண்டித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: