சமாஜ்வாடி கட்சியின் ஆதரவாளர்கள் 15 பேர், மஜ்லிஸ் கட்சி ஆதரவாளர்கள் 10 பேர் உட்பட மொத்தம் 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அன்று மாலை சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் நடந்த மோதலின்போது கொலை செய்ய முயன்றதாகவும், காவல்துறையினர் கடமையை செய்ய தடுத்ததாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதேபோல் மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் கத்நந்த்பூரில் 3 வாக்குப்பதிவு மையங்கள் சேதப்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு நடந்து கொண்டு இருக்கும்போதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டது. தடி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் கும்பல் தாக்கியதில் சில போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக அம்பாஜோகாய் காவல்நிலையத்தில் 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post உ.பி.யில் இடைத்தேர்தலில் வன்முறை 100 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.