திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் பஞ்சாக்னி, சமயம், ராஜதானி, செங்கோல், ஆக்ஷன் ஹீரோ பிஜு உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் வேடங்களில் நடித்தவர் மேகநாதன் (60). ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் மலையாள சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி வில்லன் நடிகராக இருந்த பாலன் கே.நாயரின் மகன் ஆவார். நுரையீரல் பாதிப்பு காரணமாக மேகநாதன் கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் மேகநாதன் மரணமடைந்தார்.
The post மலையாள வில்லன் நடிகர் மரணம் appeared first on Dinakaran.