உதவியாளர்களாக வந்தவர்கள் சசிகலா, டிடிவி ஜெயலலிதாவின் பணத்தை வைத்து கோடீஸ்வரரான 1000 குடும்பங்கள்: போட்டு தாக்கிய திண்டுக்கல் சீனிவாசன்

நாகப்பட்டினம்:அதிமுக சார்பில் கட்சியின் வளர்ச்சி குறித்து தமிழகம் முழுவதும் களஆய்வு கூட்டம் நடந்து வருகிறது. நாகை மாவட்ட கள ஆய்வு கூட்டம் நாகப்பட்டினம் அதிமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்களான மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன், அமைப்பு செயலாளர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரான, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதாவால் 53 ஆண்டுகள் கடந்து கட்சி நிலைத்து கொண்டிருக்கிறது. 32 ஆண்டுகள் தமிழகத்தை அதிமுக ஆட்சி செய்துள்ளது. ஒரு குடும்பமாக கூட்டணிக்கு ஆகும் செலவுகள் குறித்து நான் பேசினேன். ஆனால் இந்த பேச்சால் நானும், முன்னாள் அமைச்சர் தங்கமணியும் ஒரே நாளில் கதாநாயகன் போல் மாறிவிட்டோம். ஒரு குடும்பமாக இருக்கும் போது ஆகிய செலவை எவ்வளவு ஆகும் என சாதாரணமாக பேசியதை செய்தியாளர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

கூட்டணி குறித்து தலைமை நிர்வாகிகள் யாரும் பேசக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் அதிமுகவில் கூட்டணிக்கு யாரும் வருவது இல்லை என செய்திகள் சித்தரித்து வெளியிடப்படுகிறது. ஜெயலலிதாவிற்கு உதவியாக வந்தவர்கள் தான் சசிகலா, தினகரன். ஆனால் ஜெயலலிதாவின் பணத்தை வைத்து சசிகலா, தினகரன் குடும்பத்தில் இன்று 1000 பேர் கோடீஸ்வர்களாக ஆகிவிட்டார்கள். இந்த பணத்தை வைத்து கொண்டு தான் சசிகலா, தினகரன் ஆட்சியை பிடிப்போம் என பேசி வருகின்றனர். அதிமுவிடம் இருக்கும் பிரச்னைகளை புறந்தள்ளி விட்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

 

The post உதவியாளர்களாக வந்தவர்கள் சசிகலா, டிடிவி ஜெயலலிதாவின் பணத்தை வைத்து கோடீஸ்வரரான 1000 குடும்பங்கள்: போட்டு தாக்கிய திண்டுக்கல் சீனிவாசன் appeared first on Dinakaran.

Related Stories: