இவரது இறுதி சடங்கிற்காக சென்னையில் இருந்து சிலுவைமேரி மற்றும் அவரது உறவினர்களான செல்வராஜ் (80), அருள் தேவகுமார் (28), விக்டோரியா (30), ஆரோக்கியசெல்வி (35) ஆகியோர் ஒரு காரில் புறப்பட்டனர். காரை அருள் தேவகுமார் ஓட்டி வந்தார். நேற்று மாலை இறுதி சடங்கை முடித்து விட்டு மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சலவாதி கூட்டுசாலை அருகே இரவு 9 மணி அளவில் சாலையோர ஓட்டலில் உணவு சாப்பிட முடிவு செய்த தேவகுமார், காரை இடது புறமாக திருப்பியபோது சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட கழிவு நீர் குட்டைக்குள் கார் கவிழ்ந்து நீரில் மூழ்கியது.
இதனால் காரில் பயணம் செய்த அனைவரும் கூச்சல் இட்டனர். சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றி சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிலுவைமேரி உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கும் லேசான காயம் என்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
The post கழிவுநீர் குட்டையில் பாய்ந்த கார்; அண்ணனின் சாவுக்கு சென்று திரும்பிய சென்னை பெண் விபத்தில் பலி appeared first on Dinakaran.