டெல்லி: மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத் தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் வன் முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, இரு சமூகத் தினர் சார்ந்த ஆயுத குழுக்களும் அவ் வப்போது மோதலில் ஈடுபடுவதால் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. மோதலில் இதுவரை 200-க்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் வெடித்துள்ள நிலையில் அங்கு கூடுதலாக 5,000 துணை ராணுவ படைவீரர்கள் செல்கின்றனர்.
இந்நிலையில் மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்; மணிப்பூரில் வரலாறு காணாத வன்முறையால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மணிப்பூர் மக்கள் மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் மீது நம்பிக்கை இழந்து விட்டனர். வன்முறைகள் நடந்துவரும் மணிப்பூருக்கு நாட்டின் பிரதமர் மோடி இதுவரை செல்லவில்லை.
மணிப்பூர் விவகாரத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலையிட வேண்டும். அரசியலமைப்பின் பாதுகாவலர் என்ற முறையில் உயிர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் தலையீட்டில் மணிப்பூர் மக்கள் மீண்டும் வீடுகளில் கண்ணியத்துடன் பாதுகாப்பாக வாழ்வார்கள் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் appeared first on Dinakaran.