அந்த மனுவில் குறிப்பிடப்பட்ட முக்கிய விஷயங்கள் பின்வருமாறு:
அ. டெல்லியில் உள்ள அரசியலமைப்பு அமர்வினைத் தவிர வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்கு டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய அமர்வுகளை நிறுவுதல்.
ஆ.பிரதிநிதித்துவ நீதித்துறை – அரசியலமைப்பு திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம் மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் மாண்புமிகு உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி மற்றும் சமூக பன்முகத்தன்மையை உறுதி செய்தல்.
இ. அரசியலமைப்பு திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 65 ஆகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65-லிருந்து 70 ஆகவும் உயர்த்துதல்.
ஈ. உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் விகிதாச்சாரத்திற்கேற்ப அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை அதிகரித்தல்.
The post சென்னை, மும்பை, கொல்கத்தா நகரங்களில் உச்சநீதிமன்ற கிளையை அமைத்திடுக : ஒன்றிய அமைச்சரிடம் திமுக எம்.பி. வில்சன் மனு!! appeared first on Dinakaran.