எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் பேரவை தேர்தலே வந்துவிட்டது. டி.ஒய்.சந்திரசூட் அவர்கள் நீதியை வழங்குவதற்குப் பதிலாக ஒரு வர்ணனையாளராக மாறிவிட்டார். நீதிபதி என்பதற்கு பதிலாக அவர் சட்டத்துறை ஆசிரியராக இருந்திருந்தால், மிகவும் பிரபலமாக இருந்திருப்பார். பாஜக தலைமை மிகவும் தந்திரமானது; காங்கிரஸ் தலைமை மரியாதை அளிக்கிறது; ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் ராகுல், சோனியா, பிரியங்கா, கார்கே ஆகியோர் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்கின்றனர். இன்றைய பாஜக ‘யூஸ் அண்ட் த்ரோ’ போல மாறிவிட்டது. மும்பை தாராவியை அதானியிடம் ஒப்படைக்கப்படும் விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஆங்கிலேயேர் காலத்தில் மும்பையை வரதட்சணையாக வழங்கப்பட்டதைப் போல், தற்போதும் மும்பையை யாரிடமும் ஒப்படைக்க முடியாது. மக்கள் தான் முடிவு செய்வார்கள்; மாநில அரசு அல்ல. நான் முதல்வராக இருந்தபோது அதானியை சந்தித்தேன்; தாராவியில் டெண்டர் கொடுப்பதற்கு அல்ல; அதானியிடம் தாராவியை ஒப்படைக்காததால் எனது அரசு கவிழ்க்கப்பட்டது. நான் முதல்வராக இருந்தபோது, யாரையும் வெட்டவில்லை. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்கள் தீப்பிடித்து எரிந்தன.
அவர்களிடம் பேசுவதற்கு உண்மையான பிரச்னைகள் இல்லை; எனவே அவர்கள் அப்படி பேசுகிறார்கள். மகாராஷ்டிரா தேர்தலில் பாகிஸ்தான் பிரச்னையை எழுப்புவது முற்றிலும் பொருத்தமற்றது. நான் முதல்வராக வேண்டும் என்று கனவு காணவில்லை. மகாராஷ்டிராவை சுரண்டுபவர்களை தோற்கடிப்பதே தனது முன்னுரிமையாக உள்ளது. துணை முதல்வரான தேவேந்திர பட்நாவிசை முதல்வர் வேட்பாளாராக அமித் ஷா அறிவித்துள்ளார். ஆனால் ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் ஒப்புக்கொள்கிறார்களா? எனவே எங்களது கூட்டணி ஆட்சியமைக்கும்’ என்றார்.
The post பாஜக தந்திரமான கட்சி; காங்கிரஸ் அப்படியில்லை; முதல்வர் பதவிக்காக நான் கனவு காணவில்லை: ஓய்வுபெற்ற நீதிபதி குறித்து உத்தவ் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.