சங்காபிஷேகம் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வருகை குறைவு

 

கரூர், நவ. 19: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு அதிகளவு மக்கள் வராத காரணத்தினால் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. வாரந்தோறும் திங்கள் கிழமை நாட்களில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நாளில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்து மனு அளித்து சென்று வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்து 3வது முறையாக நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக, அதிகளவு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு பொதுமக்கள் வந்து செல்வார்கள். ஆனால், கடந்த இரண்டு வாரமாக மாலை நேரத்தில் மழை பெய்து வரும் சூழலில் கடந்த 5 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் நேற்று நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்திற்கு மக்கள் வரத்து குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக பரபரப்புடன் காணப்படும் கலெக்டர் அலுவலகம் மக்கள் வரத்தின்றி வெறிச்சோடியது.

 

The post சங்காபிஷேகம் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வருகை குறைவு appeared first on Dinakaran.

Related Stories: