குளித்தலை, நவ. 17: தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நவம்பர் 16, 17 மற்றும் 23,24 ஆகிய இரண்டு கட்டமாக சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. அதனால் அறிவிக்கப்பட்ட தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் இளம் வாக்காளர்கள் பயன்பெறாலாம்.
தேவையான ஆவணங்கள்: அடையாள சான்று. பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வங்கி கணக்கு புத்தகம், பத்தாம் வகுப்பு சான்றிதழ், மாணவர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, வயது சான்று, பத்தாம் வகுப்பு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், பான்கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் முகவரி சான்று, பாஸ்போர்ட், எரிவாயு இணைப்பு ரசீது, குடிநீர்வரி ரசீது,
ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு எடுத்துச் சென்று வாக்குச்சாவடி மையத்தில் உள்ள அலுவலர்களிடம் உரிய ஆவணத்தில் பதிவுசெய்து வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 272 வாக்குச்சாவடிகளில் முதல் கட்டமாக புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தது.
குளித்தலை நகராட்சி பகுதியில் 24 வாக்குச்சாவடிகளிலும் முதற்கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ நேரடியாக வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். அருகில் வட்டாட்சியர் இந்துமதி, நகராட்சி ஆணையர் நந்தகுமார், தேர்தல் துணை வட்டாட்சியர் வைரப் பெருமாள், மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அலுவலர்கள் இருந்தனர்.
The post குளித்தலை தொகுதியில் முதல் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.