சென்னையில் சிக்னல்கள், மேம்பாலங்களின் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி இடம் மாற்ற முடிவு: போக்குவரத்துக் கழகம் திட்டம்

சென்னை: சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி இடம் மாற்ற முடிவு செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் மாநகர போக்குவரத்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையும், மாநகர பேருந்துகள் நெரிசலில் சிக்குவதை தவிர்க்கவும் பேருந்து நிறுத்தங்களில் இடம்மாற்றுவது குறித்து தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சிக்கனல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை இடம்மாற்றுவது குறித்து மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் ஆய்வு தொடங்கியுள்ளது.

சிக்னல் மற்றும் மேம்பாலங்கள் சாலைகள் அமையும் இடங்களில் அருகே உள்ள நிறுத்தங்களை பேருந்துகள் நின்று செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது . சிக்னலில் பச்சை நிறம் ஒளிரும் போதும், சிக்னல் அருகே உள்ள நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்குவதற்காக 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் வரிசைகட்டி நிற்கும்போது பேருந்துகளின் பின்பக்கம் இருக்கும் வாகனங்கள் முன்னோக்கி செல்ல முடியாமல் பேருந்துகள் புறப்படுவதை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உருவாகிறது.

பேருந்துகள் புறப்பட தயாராகும் போது சிவப்பு நிறம் ஒளிர தொடங்குவதால் கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்னலில் காத்திருக்கும் நிலை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிக்னல் மேம்பாலங்கள் ஆகியவற்றிற்கு 100 மீட்டருக்கு முன்பாகவோ அல்லது 100 மீட்டருக்கு பின்பாகவோ மட்டுமே பேருந்துகளை நிறுத்தும் வகையில் தற்போது மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் பல இடங்களில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து நிறுத்தம் இடம் மாற்றபடாமல் உள்ளதாக மாநகர போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேருந்து நிறுத்தங்களால் மாநகர போக்குவரத்து கழகம் தன்னிச்சையாக இடம் மாற்ற முடியாது. சென்னை பெருநகர மாநகராட்சியிடம் பரிந்துரைத்து மாநகராட்சி மூலமே மட்டுமே நிறுத்தங்களை மாற்ற முடியும். பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றுவது குறித்து முதற்கட்டமாக பாரிமுனை, முகப்பேறு வழியாக செல்ல கூடிய 7m . அதேபோல் வடபழனி, தரமணி செல்லக்கூடிய பேருந்து எண் 5 வழித்தடங்கள் இந்த ஆய்வு அறிக்கையை தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் சென்னையில் அனைத்து வழித்தடங்களையும் ஆய்வு செய்யப்பட்டு 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றுவதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.

 

The post சென்னையில் சிக்னல்கள், மேம்பாலங்களின் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி இடம் மாற்ற முடிவு: போக்குவரத்துக் கழகம் திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: