எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பதல்ல, நாம் எதன்மேல் நோக்கமாயிருக்கிறோம் என்பதில்தான் உயர்வு இருக்கிறது. பணம் கோடி கோடியாய் வைத்திருந்தும், எந்த நோக்கமுமில்லாமல் வாழ்பவர்தான் ஏழை. எவ்வளவோ பட்டங்கள் வைத்திருந்தும் அதைக் கொண்டு யாருக்கும் பயனற்ற வாழ்க்கை வாழ்பவன்தான் பாமரன். ‘‘சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே, மற்றின்படி வேண்டுபவர்’’ என்ற திருவள்ளுவரின் 173வது குறலும் இக்கருத்தை விவரிக்கிறது. இக்குறலுக்கு பட்டிமன்ற பேச்சாளர் திரு. சாலமன் பாப்பையா அவர்கள் கீழ்க்கண்டவாறு விளக்கமளிக்கிறார்.’’
அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பதை விரும்பிப்பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்யமாட்டார்.
இறைமக்களே, இன்று உங்களது பார்வை எதன் மேலிருக்கிறது? பூமிக்குரியவைகளின் மேல் மோகம் வேண்டாமே… சிற்றின்பத்திற்காக பேரின்பத்தை இழக்கலாமா? சிந்தியுங்கள்…. உங்கள் நோக்கத்தை சீராக்குங்கள். உங்களின் தனித்துவமான இறை நோக்கத்தில் உறுதியாக இருங்கள்.
அப்போதுதான் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாகவும், மனநிறைவுள்ளதாகவும் இருக்கும். ‘‘பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்’’ (கொலோ.3:2) என இறைவேதம் இக்கருத்தை ஆழமாக, அழகாக வலியுறுத்துகிறது. எனவே இறைமக்களே, மண்ணுக்காக மாணிக்கத்தை இழந்து போகாதிருங்கள்!
– அருள்முனைவர். பெ.பெவிஸ்டன்.
The post மண்ணுக்காக மாணிக்கத்தை இழக்காதீர்கள்! appeared first on Dinakaran.