திருத்தணி, நவ.17: திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை மாதம் துவக்கம் மற்றும் கிருத்திகை என்பதால், நேற்று மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக கோயில் சார்பில் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. நேற்று கிருத்திகை மற்றும் கார்த்திகை முதல் நாளையொட்டி கூடுதலாக தனியார் பேருந்து ஒன்று இயக்கப்பட்டது. பேருந்துகளில் பக்தர்கள் மலைக் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து மீண்டும் பேருந்தில் கோயிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் தணிகை இல்லம் வாகன நிறுத்துமிடத்தில் இறங்கி சென்றனர்.
இந்நிலையில், நேற்று மதியம் பக்தர்களை ஏற்றிக்கொண்டு கோயிலுக்கு சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்தும் சென்றுக் கொண்டிருந்தன. அப்போது, பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பேருந்து திடீரென பின்னோக்கி சென்றது. அப்போது, பேருந்துக்கு பின்னால் சென்றுக் கொண்டிருந்த திருத்தணி அரசு மருத்துவமனை மருத்துவர் சுமதி மற்றும் அவரது உறவினர், பேருந்து பின்னோக்கி வருவதை கண்டு பைக்கை விட்டு சாதுர்யமாக இறங்கி ஓரமாக சென்று விட்டனர்.
இதனால், அவர்கள் காயமின்றி உயர் தப்பினர். இந்நிலையில், அவர்கள் வந்த பைக் மீது பஸ் சக்கரம் ஏறியதில் பைக் நொறுங்கியது. இதனையடுத்து, மலைக்கு வந்து கொண்டிருந்த கோயில் பேருந்தின் முன் பக்கத்தில் தனியார் பஸ் மோதி நின்றது. இச்சம்பவத்தில் கோயில் பஸ் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
The post திருத்தணி மலை பாதையில் பஸ்கள் திடீர் மோதல்: பக்தர்கள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.