புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில் மரண பள்ளங்களாக மாறிய சர்வீஸ் சாலை: சீரமைக்க கோரிக்கை

புழல், நவ. 15: புழல் காவாங்கரை, தண்டல் கழனி ஆகிய பகுதிகளில் மழையால் மரண பள்ளங்களுடன் காணப்படும் சர்வீஸ் சாலையினை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை புழல், காவங்கரையிலிருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை காவாங்கரை மீன் மார்க்கெட், தண்டல் கழனி ஆகிய சர்வீஸ் சாலைகளில் பல இடங்களில், சமீபத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக, மழைநீர் சாலைகளில் தேங்கி, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி மரணப் பள்ளங்களாக காட்சியளிக்கிறது.

இதனால், சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், குறிப்பாக பைக் மற்றும் சைக்கிள்களில் செல்பவர்கள், சாலையில் உள்ள மரண பள்ளத்தை கடந்து செல்லும்போது, கீழே விழுந்து படுகாயமடைந்து வரும் சூழ்நிலை உள்ளது. மேலும், இச்சாலையில் மின் விளக்குகள் இல்லாத காரணத்தால், இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. ஒருசில நேரங்களில் இதனை பயன்படுத்தி பைக்கில் செல்பவர்களை வழிமறித்து, மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து ஜல்லிகற்கள் பெயர்ந்து, மரண பள்ளங்களாக காணப்படும் சாலையினை சீரமைத்து, இப்பகுதியில் மின்விளக்குள் அமைக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, சர்வீஸ் சாலை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் கூறுகையில்; புழல் காவாங்கரை பகுதியிலிருந்து செல்லும் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் செங்குன்றம் செல்லும் திசையில் மீன் மார்க்கெட், தண்டல் கழனி ஆகிய பகுதிகளில் சுமார் அரை கிலோ தூரமுள்ள சாலையில் ஆங்காங்கே ராட்சத பள்ளங்கள் உருவாகி, மரணம் பள்ளங்களாக உள்ளது. தற்போது, பெய்து வரும் மழையால் பள்ளங்கள் உள்ள இடங்களில் மழைநீர் தேங்கி, பள்ளம் எது என்று தெரியாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள், அதில் விழுந்து படுகாயம் அடைகின்றனர். குறிப்பாக, இப்பகுதியில் மின் கம்பங்கள் இல்லாததால் இரவு நேரங்களில் செல்லும்போது பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் சர்வீஸ் சாலைகளை ஆய்வு செய்து, பள்ளமான சாலையை சீரமைத்து, மின் விளக்குகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுங்க கட்டணம் வசூலிக்கும் நல்லூர் சுங்க சாவடி நிறுவனத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கிடவும் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

The post புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில் மரண பள்ளங்களாக மாறிய சர்வீஸ் சாலை: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: