துறையூர், நவ.17: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன் கலைஞரின் திருஉருவ சிலை நிறுவப்பட உள்ளது. இது தொடர்பான பணிகள் குறித்து கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சின்னஏரியை பார்வையிட்ட அமைச்சர் அதனை தூர்வாரி சீரமைக்கவும், பொது மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படகு சவாரி, வாட்டர் பவுண்டைன் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் சின்ன ஏரி புனரமைக்கும் பணிக்கும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள கூறினார்.
ஆய்வின்போது கலெக்டர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட அறங்காவல் குழு நியமனத் தலைவரும், துறையூர் நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி, நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா, துறையூர் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, சிவ சரவணன், வீரபத்திரன், செயலாளர் முத்துசெல்வன், அசோகன், துறையூர் பெரிய ஏரி சின்ன ஏரி நீர்நிலை பயன்படுத்துவோர் சங்க தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post துறையூரில் கருணாநிதிக்கு சிலை அமைக்க அமைச்சர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.