இந்நிலையில் உளுந்தை ஊராட்சியில் இருளர் இன மக்களுக்காக தமிழக அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வட மாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் உளுந்தை ஊராட்சியில் உள்ள நூலகத்தில் தங்கியுள்ளனர். அங்கேயே சமைத்தும், துணி துவைத்தும், துவைத்த துணிகளை உலர வைத்தும், ஒரு வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் போன்று உள்ளனர். இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நூலகத்தில் பணியாளர் இல்லாதது மற்றும் வடமாநிலத்தவர்கள் தங்கி இருப்பதால் நூலகத்திற்கு ஒருவரும் வருவதில்லை. எனவே ரூ.1.40 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உளுந்தை ஊராட்சி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post உளுந்தை ஊராட்சியில் வடமாநிலத்தவர்களால் நூலகம் ஆக்கிரமிப்பு: தங்கி, சமைத்து சாப்பிடும் அவலம் appeared first on Dinakaran.