மல்லசமுத்திரம், நவ. 14: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு 110 மூட்டை பருத்தியை, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். திருப்பூர், அவிநாசி, காங்கேயம், சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் பி.டி. ரகம் பருத்தி குவிண்டால் ₹6,760 முதல் ₹7,480 வரையிலும், கொட்டு ரகம் பருத்தி குவிண்டால் ₹3,720 முதல் ₹4,540 வரையிலும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த பருத்தி ₹2 லட்சத்துக்கு விற்பனையானது. அடுத்த பருத்தி ஏலம் 20ம்தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ₹2 லட்சத்துக்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.