×
Saravana Stores

குழந்தை திருமணம்; வாலிபர் மீது வழக்கு

சேலம், நவ.14: சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனுஷ்(21). இவர் 18 வயது சிறுமியை காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டதாக சைல்டு லைனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரித்த அப்பிரிவினர், சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்ததை உறுதி செய்து கொண்டு, உடனடியாக அச்சிறுமியை மீட்டு, சிறுமியர் வரவேற்பு இல்லத்தில் தங்க வைத்தனர். இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரியான ஜீவா, சூரமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இதையடுத்து குழந்தை திருமண சட்டத்தின் கீழ், வாலிபர் தனுஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குழந்தை திருமணம்; வாலிபர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Salem ,Dhanush ,Pallapatti ,
× RELATED பயணிகள் நடந்து செல்லும் பாதைகளில் மது...