×

திமுக பிரமுகர் கொலை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை

சேலம், நவ.13: சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சோலைராஜ். திமுக வட்ட செயலாளராக இருந்து வந்தார். கடந்த 2010ம் ஆண்டு ஒரு கும்பலால் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். மணக்காட்டில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது தொடர்பாக இக்கொலை சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி 21 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இதில், விசாரணை தொடங்கும் நிலையில் இரண்டு பேர் தலைமறைவாகிவிட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சூரி, காமராஜ், நெட்டகார்த்தி, போட்டிசத்யா ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். மீதம் உள்ள சண்முகம், கரிகாலன், அசோக்குமார், மதன்குமார், சிக்கந்தர், கோவிந்தராஜ், சாம்ராஜ், பிரதாப், மகேந்திரன், சரவணன், வசந்தகுமார், சித்ரா, சுபாஷினி, னிவாசராவ், கனிவளவன், முருகன் ஆகிய 17 பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி வருகிற 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்று முதல் வழக்கு விசாரணை தொடங்கும் என தெரிகிறது. 14 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு விசாரணை தொடங்குவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post திமுக பிரமுகர் கொலை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை appeared first on Dinakaran.

Tags : DMK ,Salem ,Solairaj ,Astampatty Manakkad ,Manakkad ,Dinakaran ,
× RELATED ஞானசேகரன் திமுகவின் அடிப்படை...