×

பீர்பாட்டிலால் தாக்கி வாலிபர் மண்டை உடைப்பு

சேலம், நவ.12: சேலம் அஸ்தம்பட்டியில் குடிபோதை தகராறில் பீர்பாட்டிலால் தாக்கி வாலிபர் மண்டையை உடைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டை கண்ணன்காடு பகுதியில் உள்ள ஹவுசிங்போர்டில் வசித்து வருபவர் அசோக்குமார் (33). இவர் நேற்று முன்தினம் மதியம் அந்த பகுதியில் உள்ள காலியிடத்தில் நின்றபடி, மது குடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதேபகுதியை சேர்ந்த பிரதாப் (எ) சுகேஷ் (23) வந்துள்ளார். அவர், 2 நாட்களுக்கு முன்பு ஏன் தன்னிடம் தகராறு செய்தாய் எனக்கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் பிரதாப், திடீரென கீழே இருந்த பீர்பாட்டிலை எடுத்து அசோக்குமாரின் தலையில் தாக்கினார். மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் கையால் தடுத்தபோது, பாட்டில் வெட்டு விழுந்து ரத்தம் வழிந்தது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து, அசோக்குமாரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீஸ் எஸ்ஐ ரவி தலைமையிலான போலீசார், சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, பீர்பாட்டிலால் தாக்கிய பிரதாப்பை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பீர்பாட்டிலால் தாக்கி வாலிபர் மண்டை உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Astampatti ,Ashokumar ,Kannankadu ,Johnsonpet, Astampatty, Salem ,
× RELATED திருடிய காரை சேலத்தில் விட்டுச்சென்ற மர்மநபர்கள்