×

எலி மாத்திரை சாப்பிட்டு மாணவர் சாவு

சங்ககிரி, நவ.13: சங்ககிரி அருகே நாகிசெட்டிபட்டி லட்சுமி நரசிம்மா நகரைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் சேகர்(46). இவரது மகன் பூசன்(19), தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் பூசன் விடுமுறை நாட்களில் படிப்பதை விட்டுவிட்டு கிரிக்கெட் விளையாட சென்றதால், சேகர் திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை குளிப்பதற்காக பாத்ரூம் சென்ற பூசன், சிறிது நேரத்தில் வெளியே வந்து வாந்தி எடுத்துள்ளார். பெற்றோர்கள் கேட்டதற்கு எலி மாத்திரை சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூசன் நேற்று காலை இறந்துவிட்டார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post எலி மாத்திரை சாப்பிட்டு மாணவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Sangakiri ,Shekhar ,Nagisettipatti Lakshmi Narasimha ,Bhusan ,Pusan ,
× RELATED 15 வயது சிறுமி கர்ப்பம் கணவர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது