×

ஜெத்தா நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழா

ஜெத்தா : சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய துணை தூதர் முஹம்மது நூர் ரஹ்மான் ஷேக் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் இந்திய குடியரசுத் தலைவரின் உரையை வாசித்தார். தேச பக்திப் பாடல்கள் பாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடத்திய சிறப்பு பொங்கல் விழா