×

இந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்

துபாயில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர்  ரத்தத்தை தானமாக அளித்தனர். இந்நிகழ்ச்சிக்கு இந்திய துணை தூதரக அதிகாரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஈமான் பொது செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின் தலைமை வகித்தார்.  ஈமான் சார்பில் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத்துல்லா,நிர்வாக செயலாளர் நிஜாம் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள்  ஏற்பாடுகளை செய்திருந்தனர். பல்வேறுஅமைப்புகளை சேர்ந்தோர் பங்கேற்றனர். ரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது

Tags :
× RELATED கனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடத்திய சிறப்பு பொங்கல் விழா