×

துபாய் அமீரகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி

துபாய் அமீரகத்தில் உள்ள‌ திமுகவினர் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது பாவை அனிபா தலைமையில் துபாய் மலபார் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமீரகத்தில் உள்ள‌ திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மறைந்த‌ கலைஞர் அவர்களின் சாதனைகளை ஒவ்வொருவரும் எடுத்துரைத்தனர்.

விழாவில் சிவகங்கை மகேந்திரன் மகளிரணி சானியோ, பாலா மணிமொழியன், அனீஸ் சுப்பிரமணியம், செந்தில் பிரபு, சிக்காம் பிரபு, கல்யாணராமன் தமீஸ், அஜிர் யூசுப், வெங்கட் பஹீம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED கனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடத்திய சிறப்பு பொங்கல் விழா