திண்டுக்கல்: பூசாரி தற்கொலை வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா மீதான வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. ஒ.ராஜா உள்பட 6 பேர் மீதான வழக்கில் திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக நாகமுத்து இருந்தார். ஓ.ராஜாவுடன் கருத்து வேறுபாடு நிலவிய நிலையில் பூசாரி நாகமுத்து தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. கருத்து வேறுபாடு நிலவிய நிலையில் 2012 டிச.7-ம் தேதி பூசாரி நாகமுத்து தற்கொலை செய்துகொண்டார். பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக ஓ.ராஜா, பாண்டி, மணிமாறன் உள்பட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப்படி 2015 முதல் வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் பாண்டி இறந்துவிட்டார்.
The post ஓ.பி.எஸ். சகோதரர் வழக்கில் இன்று தீர்ப்பு appeared first on Dinakaran.