தொடர் மழை எதிரொலி: இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? – ஆட்சியர்கள் வெளியிட்ட அறிவிப்பு!

மயிலாடுதுறை: தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை நீடிக்கு வாய்ப்புள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டள்ளார்.

இதேபோல், தொடர் கனமழையின் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மழை காரணமாக கடலூர் அரியலூர், பெரம்பலூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.13) விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும். புதுச்சேரியில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல் தெரிவித்துள்ளார்.

 

The post தொடர் மழை எதிரொலி: இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? – ஆட்சியர்கள் வெளியிட்ட அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: