ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

விருதுநகர், நவ.13: ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் நகர்குழு செயலாளர் ஜெயபாரத் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், நேரு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், கடந்த ஓராண்டில் உணவுப்பொருட்களின் விலை 52 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசு உணவு பொருட்களின் மீது ஜி.எஸ்.டி விதித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாதியாக குறைந்துள்ள போதிலும் நமது நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்படவில்லை. வேலைவாய்ப்பின்றி இளைஞர்கள் தவிக்கும் நிலை உருவாகி உள்ளது. பெண்கள், குழந்தைகள் மீது தொடரும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மோடி அரசின் சர்வாதிகாரத்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரங்கள், மாநிலங்களுக்கான உரிமைகள் பறிக்கப்படும். சர்வாதிகார பாதைக்கு வழிவகுப்பதாக ஒன்றிய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் அர்ச்சுணன், வேலுச்சாமி, முருகன், முத்துக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: