தர்மபுரி, நவ.13: ஊட்டமலை பகுதியில் மண் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஆர்ஐ ராஜா, விஏஓ செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் கூத்தப்பாடியில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளை ஆய்வு செய்யும் பணிக்காக வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். ஊட்டமலை பகுதியில் சென்றபோது, எதிரே 3 டிராக்டரில் சிலர் மண் எடுத்து வந்தனர். தொடர்ந்து வாகனங்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 யூனிட் நுரம்பு மண் கடத்தியது தெரியவந்தது. மண் கடத்தியவர்களை பிடித்து அதிகாரிகள், ஒகேனக்கல் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து மண் கடத்திய மடம் பகுதியைச் சேர்ந்த துரை(32), பொன்முடி(42), மூர்த்தி(27) ஆகியோரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post மண் கடத்திய 3 பேர் கைது appeared first on Dinakaran.