ரெட்டேரியில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் அறிவிப்பு பலகை: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

புழல்: புழல் அடுத்த எம்ஜிஆர் நகர், மாதவரம் ரெட்டேரி பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து, பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இந்த இடம் நீர்வளத்துறைக்கு சொந்தமானது என தெரிவித்து செங்குன்றம் நீர்வளத்துறை சார்பில், கடந்த ஜூலை மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இவ்வாறு, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் நீர்வளத்துறை சார்பில், எந்தவித தடுப்பு சுற்றுச்சுவர் மற்றும் இந்த இடம் நீர்வளத்துறைக்கு சொந்தமான இடம் என்று பெயர் பலகையும் இதுவரை வைக்கப்படவில்லை.

இதனால், நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தை சிலர் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டுவதற்காக, வீட்டு மனைகள் அமைப்பதற்கான முயற்சிகள் சமூக விரோதிகள் மூலம் நடப்பதாக கூறப்படுகிறது. இதில், குறைந்த விலைக்கு நிலம் வாங்குவதற்கு தயாராக உள்ள பொதுமக்களை ஏமாற்றி, சிலர் இந்த நிலத்தை மீண்டும் ஆக்கிரமிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் தடுப்பு வேலி அமைத்து, அறிவிப்பு பலகை அமைக்க நீர்வளத்துறை உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ரெட்டேரியில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் அறிவிப்பு பலகை: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: